Let's join hands for a better world !

Rains are Nature’s way of showering mercy on us. If we had stored its bounty prudently, Tamil Nadu would not have had a water deficit for the next few years. But, that was not to be. This is the time to analyse why a gift turned into gloom. That is why The Hindu, a well-reputed publication house, Puthiya Thalaimurai, a leading Tamil media house that is well-known for its innovative and neutral approach, and Agaram Foundation, which works in the field of education, have come together to host a conference that seeks to tap into the people power that came to the fore during the floods. It wishes to bring under one umbrella all those who care for society.

The rains wreaked havoc on humans, but humaneness still won. We all saw how the common man helped a State Capital grappling with unprecedented flooding. Even though the waters have receded, humaneness thrives and continues to spring forth. We believe that if we tap into this people’s power and channelise it well in the direction suggested by experts, Tamil Nadu will go places.

Our two-day conference held on January 2nd and 3rd of 2016 at St. Bede's Auditorium Chennai - 600004, focussing on the role of the people in protecting and preserving our water bodies and ecology, bring together people who volunteered during the crisis and experts, deliberate on the various challenges that we face and help devise strategies to tackle these challenges in the short and long term. The sessions saw debates on topics such as public, private and government partnership in conserving water, safeguarding and maintaining water bodies and creating awareness for environmental conservation among the public. The conference strived to find solutions to address current shortcomings and provide workable solutions that can positively impact our future, Only if we make everyone understand the importance of protecting ecology will our future generations inherit a joyous, greener world.

Let 2016 ring in a year full of possibilities and positive change.
Let us Unite to Unify!

யாதும் ஊரே.. இணைவோம்.. இணைப்போம்..

பெருமழை என்பது இயற்கை நமக்கு அளித்த பெரும்கருணை. அதை சரியாக பயன்படுத்தி இருந்தால், தமிழகத்தில் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தண்ணீர் பஞ்சம் வந்திருக்காது. இயற்கையின் பெருங்கருணை, பேரிடராக ஏன் மாறியது என்கிற கேள்விக்கான பதிலை அனைவரும் இணைந்து தேடவேண்டிய தருணம் இது. சமூகப் பணியாற்ற தன்னெழுச்சியுடன் வெளிவந்த மக்கள் சக்தியை இணைக்கும் மகத்தான பணியில், பத்திரிகையுலகில் மக்களின் மனசாட்சியாக விளங்கும் ‘தி இந்து குழுமம்’, மக்களின் மனதில் மாற்றத்தை விதைக்கும் புதியதலைமுறைகுழுமம், கல்வி வளர்ச்சியில் சமூக வளர்ச்சியை நிகழ்த்த பாடுபடும் அகரம் ஃபவுண்டேஷனும் இணைந்து, சமூக அக்கறையுள்ள அனைவரையும் இணைக்கும் முயற்சியை மேற்கொள்கிறோம்.

மழை வெள்ளத்தில் மக்களின் வாழ்க்கை வீழ்த்தப்பட்டது. ஆனால், மானுடம் வென்றது. மனிதநேயத்தின் அளப்பரிய சக்தியை நாம் அனைவரும் நேரடியாக பார்த்தோம். மழையில் மூழ்கிய தமிழக தலைநகரத்தை, தன் தோள்மீது சுமந்தது மனிதநேயம்மிக்க மக்கள்சக்தி. மழைவெள்ளம் வடிந்தாலும், மனித நேயம் தொடர்ந்து ஊற்றெடுக்கிறது. தன்னெழுச்சியுடன் வெளிப்பட்ட மக்கள் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, அறிஞர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளை நடைமுறை படுத்தினால், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பது சத்தியம்.

‘நீர்நிலைகள், சுற்றுசூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்களாகிய நமது பங்களிப்பு’ பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கை, வரும் 2016 ஜனவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்துகிறோம். அரசுடன் ஒத்துழைத்து நீர்நிலைகளைப் பராமரித்தல், சுற்றுப்புற சூழலைப் பாதுகாத்தல், இதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே அடுத்தத் தலைமுறை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் சூழலை உருவாக்கமுடியும். 2016-ஆம் ஆண்டு புதிய மாற்றத்திற்கான நல்ல தொடக்கமாக இருக்கட்டும்.

இணைவோம்... இணைப்போம்...